தமிழ்நாடு

வங்கி மேலாளர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் : குற்றவாளிகள் 5 பேரை கைது செய்த போலீசார்

சென்னையில் வங்கி மேலாளர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் வீட்டு வேலைக்கார பெண் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
சென்னை பழைய பல்லாவரம் பகுதியில் வசித்து வரும் யோக சேரன் தனியார் வங்கியில் மேலாளராக இருந்து வருகிறார். இவர் வீட்டிற்குள் நேற்று முன்தினம் 4 பேர் கொண்ட மர்மகும்பல் ஒன்று நுழைந்துள்ளது. வீட்டில் இருந்தவர்களை கத்திமுனையில் மிரட்டி 200 சவரன் நகைகளை அந்த கும்பல் கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் வீட்டில் வேலை பார்த்து வந்த மதுரையை சேர்ந்த மகாராணி என்ற பெண்ணே இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது. கொள்ளையடிக்க திட்டமிட்ட மகாராணி, வீட்டில் வளர்க்கப்பட்ட 2 நாய்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். அதன்பின்னர் மதுரையில் இருந்து 4 இளைஞர்களை வரவழைத்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். கொள்ளையடித்த நகைகளுடன் தலைமறைவான மகாராணி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது