தமிழ்நாடு

8ஆம் வகுப்பு மாணவி மீது ஒருதலைக் காதல் - காதலிக்க வற்புறுத்தி சிறுமியின் கழுத்தை அறுத்த இளைஞர் கைது

சென்னையில் காதலிக்க வற்புறுத்தி பள்ளி மாணவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

சென்னை அமைந்தகரை பகுதியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி ஒருவரை அதே பகுதியை சேர்ந்த நித்யானந்தம் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த மாணவி அவரின் காதலை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவி வீட்டுக்கு வந்த போது மாணவியுடன் மொட்டை மாடிக்கு சென்ற இளைஞர் அவரிடம் தன்னை காதலிக்குமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடினார். இதில் படுகாயமடைந்த அந்த மாணவி, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பி ஓடிய நித்தியானந்தத்தை போலீசார் இன்று கைது செய்தனர். இவர் ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி செய்யும் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் என்பதும், மாணவியை பல நாட்களாக பின்தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு