தமிழ்நாடு

சென்னையில் கள்ளக் காதல் விவகாரத்தில் இளைஞருக்கு கத்திக்குத்து : சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு போலீசார் ஆய்வு

சென்னையில் பட்டப்பகலில் கள்ள காதல் விவகாரத்தில் இளைஞருக்கு கத்திக்குத்து விழுந்தது.

தந்தி டிவி

மயிலாப்பூ​ரை சேர்ந்த தினேஷ், நடந்து சென்ற போது ஆட்டோவில் வந்த இரண்டு பேர் கத்தியால் அவரை குத்தியுள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் விழுந்த தினேஷை அருகே இருந்தவர்கள் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அருகே உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் தாக்குதலுக்கு உள்ளான தினேஷ்க்கு அதே பகுதியை சேர்ந்த மணமான பெண் ஒருவருக்கும் கள்ள தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு ஏற்கனவே காவல் நிலையத்தில் உள்ள நிலையில், தன் மனைவியுடன் தினேஷ் தொடர்ந்து பழகி வந்ததால் ஆத்திரமடைந்த கணவர் தனது நண்பருடன் சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். , இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தாக்குதலை நடத்திய இருவருரையும் தேடி வருகின்றனர்.

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS