தமிழ்நாடு

பெற்ற தாயை தனி அறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்த மகன்

சென்னையில் பெற்ற தாயை தனி அறையில் பூட்டி வைத்து உணவளிக்காமல் மகனே கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

தந்தி டிவி

சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் புஷ்பம். 71 வயதான இவருக்கு கருணாகரன், தினகரன் என 2 மகன்கள் உள்ளனர். இவரது கணவர் வேணு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தன் மகன்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அதில் இளைய மகன் தினகரன் நூரிஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதோடு தன் தாயையும் தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் அங்கு சென்றது முதல் தன் மகன் தன்னை தனி அறையில் வைத்து கொடுமைப்படுத்தியதாக புஷ்பம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். காலையிலிருந்து மாலை வரை தமக்கு சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை செய்து வந்ததாகவும் கூறுகிறார்.

தாயை தனி அறையில் அடைத்து வைத்து விட்டு வீட்டில் பாலியல் தொழில் செய்து வந்ததாகவும், இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில் தினகரனின் மனைவிட உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

மகனின் கொடுமையை தாங்க முடியாமல் அங்கிருந்து பலமுறை தப்பிக்க முயன்றும் அதற்கான சூழல் வாய்க்கவில்லை என்கிறார்... தன் மூத்த மகன் கருணாகரனுக்கு வாங்கிக் கொடுத்த வீட்டை மோசடி செய்து இளையமகன் தினகரன் விற்று விட்டதாகவும் தன் வங்கி கணக்கில் இருந்த 30 லட்ச ரூபாய் பணத்தை அபகரித்து சென்றதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் இந்த மூதாட்டி.

தனக்கும் தன் மூத்த மகனுக்கும் தற்போது கண் பார்வை மங்கிய நிலையில் அன்றாட உணவுக்கே வழியில்லாமல் தவிப்பதாகவும் கண்ணீர் மல்க கூறுகிறார் இவர்... தன் மகன் மீதான குற்றச்சாட்டுகளை சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனுவாக அளித்துள்ளார்.

புஷ்பாவின் புகாரின் பேரில் உரிய விசாரணை நடத்த நுங்கம்பாக்கம் உதவி ஆணையருக்கு , சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி