சென்னை வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகர் குடியிருப்பில் லிப்ஃட் பாதி வழியில் நின்றது. லிப்ஃடில் மூன்று பேர் சிக்கியிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அருகிலிருந்த குடியிருப்பு வாசிகள் துரிதமாக செயல்பட்டு சிக்கித் தவித்தர்களை மீட்டனர். இதுகுறித்து பேசிய மக்கள், அடிக்கடி இதுபோல் பழுது ஏற்படுவதாகவும், முறையான பராமரிப்பு இல்லாததே இதற்கு காரணம் எனவும் குற்றம் சாட்டினர்.