தமிழ்நாடு

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ தங்கம் : அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிய குருவிகள்

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 12 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதனை கடத்தி வந்த குருவிகள், அதிகாரிகளை தாக்கி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 12 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதனை கடத்தி வந்த குருவிகள், அதிகாரிகளை தாக்கி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தில், மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சில சுங்க இலாகா அதிகாரிகள் அவர்களுக்கு உடந்தையாக இருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், குருவிகள் தப்பியோடியது குறித்து, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரி பிரித்விராஜ் விமான நிலைய போலீசில் புகார் செய்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்