தமிழ்நாடு

சென்னையில் அதிர்ச்சி.. 1 கிலோ ரூ.25 கோடி.. அதிரடி காட்டிய அதிகாரிகள்

தந்தி டிவி

கத்தாரில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருளை, விமானநிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் இருந்த பயணிகளை, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பாரத் வசித்தா என்ற இளைஞரை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அவர் வைத்திருந்த பைக்குள் சுமார் ஒரு கிலோ எடையுடைய போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. முதலில் ஹெராயின் போதைப்பொருள் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்ட நிலையில், பின்னர் அது மிகவும் விலை உயர்ந்த கொக்கைன் போதைப்பொருள் என தெரியவந்தது. இதன் சந்தை மதிப்பு சுமார் 15 கோடி முதல் 25 கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைதான இளைஞரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்