தமிழ்நாடு

சென்னை கூடுதல் காவல் ஆணையர் அன்பு வீட்டில் பணம், நகை கொள்ளை - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

சென்னை கூடுதல் காவல் ஆணையர் அன்பு வீட்டில் பணம், நகை கொள்ளை - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்புவின் பூர்வீக வீட்டில் பணம், நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி

உள்ளது. சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையராக பணியாற்றி வரும் ஐ.பி.எஸ் அதிகாரி அன்புவின் பூர்வீக வீடு, திருவள்ளூர் மாவட்டம்

ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சி பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில், அன்புவின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ள புகுந்த கொள்ளையர்கள், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும், வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள்

அடங்கிய ஹார்ட் டிஸ்க்கையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து, ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி

வருகின்றனர். காவல்துறை உயர் அதிகாரியின் பூர்வீக வீட்டில் கொள்ளை சம்பவம் அரங்கேறி இருப்பது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்