தமிழ்நாடு

மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு : ஜெயமாலா,அவரது சகோதரர் உள்பட 3 பேர் கைது

மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், டெல்லியில் கைதான ஜெயமாலா உள்பட 3 பேரை சென்னை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தந்தி டிவி

சென்னை யானைகவுனியில், கடந்த 11 ஆம் தேதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில், ஏற்கனவே, கைதான மூன்று பேரை பத்துநாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த இறந்த சீத்தலின் மனைவி ஜெயமாலா, அவரது சகோதரர் விலாஷ் உள்பட மூன்று பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெயமாலாவிடம் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் சுட்டுக்கொல்லப்பட்ட தபுபாயின் இரண்டு வளையல்கள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். டெல்லி நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி, நாளை சென்னை அழைத்து வர தனிப்படை போலீஸ் திட்டமிட்டுள்ளது. இதனிடையே, ஜெயமாலாவை அழைத்து வர, சென்னையில் இருந்து பெண் காவல் ஆய்வாளர் தலைமையில் ஒரு குழு டெல்லி சென்றுள்ளது.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்