தமிழ்நாடு

செங்கம் : டாஸ்மாக் கடையை மூடி பொது மக்கள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பி.எல்.தண்டா பகுதியில் இயங்கி வரும் மதுக்கடையை மூடக்கோரி, பொது மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பி.எல்.தண்டா பகுதியில் இயங்கி வரும் மதுக்கடையை மூடக்கோரி, பொது மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மதுக்கடைகுறித்து, பலமுறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், திடீரென ஒன்று சேர்ந்த அப்பகுதி மக்கள், மதுபான கடையை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த செங்கம் காவல் ஆய்வாளர் ஜெயந்தி, விரைவில் கடை அகற்றப்படும் என உறுதி அளித்ததின் பேரில், போராட்டம் முடிவுக்கு வந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்