செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ரயில் நிலையத்தில் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலை மறித்து, 200க்கும் மேற்பட்ட பயணிகள் மறியலில் ஈடுபட்டனர். இந்த ரயிலில் 14 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயங்கி கொண்டிருந்தன. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 2 பெட்டிகளை குறைத்து, 12 பெட்டிகளுடன் இயங்கி வந்தன. இதனால் ரயிலில் பயணிகள் நெரிசல் ஏற்பட்ட நிலையில், பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.