செங்கல்பட்டு வழியாக திருமால்பூர், அரக்கோணம் செல்லும் பயணிகள் மின்சார ரயில் தொடர்ந்து தாமதமாக வருவதாக கூறி பயணிகள் நேற்று இரவு செங்கல்பட்டில் ரயிலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பயணிகள் கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக செங்கல்பட்டில் இருந்து திருமால்பூர் அரக்கோணம் செல்லும் ரயில்கள் 1 மணி நேரம் தாமதமாக சென்றன.