தமிழ்நாடு

6 திருமண மண்டபங்களுக்கு பூட்டு.. அதிகாரிகள் ஆக்சன்.. உறவினர்கள் அதிர்ச்சி

தந்தி டிவி

செங்கல்பட்டில் பல ஆண்டுகளாக வரி கட்டாமல் ஏமாற்றி வந்த 6 திருமண மண்டபங்களுக்கு நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.

செங்கல்பட்டுயில் இயங்கி வரும் 6 திருமண மண்டப உரிமையாளர்கள் கால அவகாசம் அளித்தும் முறையாக வரிகட்டாமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான திருமண மண்டபத்திற்கு 1 கோடி ரூபாயும் துரைசாமி என்பவரின் திருமண மண்டபத்திற்கு 24 லட்சம் ரூபாயும் ரஹ்மத் என்பவரின் திருமண மண்டபத்திற்கு 20 லட்சம் ரூபாயும் வரி பாக்கி உள்ளதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து 6 திருமண மண்டபவங்களையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். துரைசாமி பட்டம்மாள் திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில், அதற்கு அதிகாரிகள் சீல் வைத்ததால் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

BREAKING || "அமமுக கூண்டோடு கலைப்பு" - ராம்நாட்டில் பரபரப்பு அறிவிப்பு

BREAKING || முதல்வரின் பாதுகப்பு வளையம் மீறப்பட்ட அதிர்ச்சி காட்சிகள் - வெளியான பரபரப்பு வீடியோ

Thirumavalavan | CM Vijay | CM விஜய், திருமா சந்திப்பு முடிந்த கையோடு விசிகவிலிருந்து கடும் கண்டனம்

BREAKING | CPM | TVK | CM VIJAY | "ஏற்புடையதல்ல.." - சிபிஎம் கடும் கண்டனம்

CM Vijay || "தவெகவுக்கு ஆதரவளிக்கும் முக்கிய புள்ளிகள்"- நாளை என்ன நடக்கும்?