தமிழ்நாடு

கொரோனா பீதி-50 சதவீத பேருந்துகள் நிறுத்தம் - சுங்கச்சாவடியில் பயணிகள் அலைமோதியதால் பரபரப்பு

கொரோனா வைரஸ் பீதியால் சொந்த ஊருக்கு செல்ல செங்கல்பட்டு, பரணூர் சுங்கச்சாவடியில் பயணிகள் அலைமோதியதால் பரபரப்பாக காணப்பட்டது.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் நடவடிக்கையாக பள்ளி, கல்லூரி, வணிக வளாகம், அலுவலகம் உள்பட மக்கள் கூடும் இடங்களை மூட மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி உள்ளன. இந்த நிலையில், பொதுமக்கள் வெளியில் செல்வதை இன்று ஒருநாள் முழுமையாக குறைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 50 சதவீத பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து, தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள், பேருந்துகளுக்காக பரணூர் சுங்கச்சாவடியில் அலைமோதினர். கூட்டத்தை சமாளிக்க முடியாத போலீசார், காலியாக செல்லும் லாரி, வேன், கார் போன்ற வாகனங்களில் பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Maduranthakam CM Vijay Campaign | மதுராந்தகத்தில் CM விஜய்யின் ரோடு ஷோ? - இதுதான் முழு பிளான்..

Breaking | Veeramani Case | கொடூரன் ஜெம் வீரமணி விவகாரம் | வெளியானது 2025ல் பதியப்பட்ட வழக்கு விவரம்

Maduranthakam CM Vijay Campaign | புறப்பட்டார் CM விஜய் - ஃபுல் கண்ட்ரோலில் மதுராந்தகம்

Gem Veeramani| `ஜெம்’ வீரமணி வழக்கை கையில் எடுக்கும் ED - விஷயத்தை மூடி மறைத்தவர்கள் அனைவரும் கைது?

Youtuber | Theft | கழுத்து நிறைய நகையுடன் ரீல்ஸ் போட்ட யூடியூபர் - கொள்ளையர்கள் துணிகர சம்பவம்