வாடகை காரால் வந்த வினை
உயிர் காக்கும் பொருள் சிறுவன் உயிரை குடித்த சோகம்
விபத்தின்போது கார் ஏர்பேக் வெடித்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த வீரமுத்து, தனது மனைவி மற்றும் 7 வயது மகன் கவின் ஆகியோருடன் வாடகை காரில் சென்னை சென்று கொண்டிருந்தார். முன்னால் சென்ற சுரேஷ் என்பவரின் கார், திடிரென இடதுபுறம் திரும்பியதால், வீரமுத்து சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டு ஏர்பேக்
வெடித்துள்ளது. இதில் முன் சீட்டில் தந்தை மடியில் அமர்ந்திருந்த சிறுவன் கவின் முகத்தில் ஏர்பேக் தாக்கம் காரணமாக லேசான காயம் ஏற்பட்டு மயங்கியுள்ளார். பின்னர் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.