பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தியும், கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், செங்கல்பட்டு அருகே மாரத்தான் போட்டி நடைபெற்றது. மகேந்திரா சிட்டி என்ற இடத்தில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.