தமிழ்நாடு

சுற்றுலா தளமாக இருந்த கொளவாய் ஏரியின் தற்போதைய நிலை என்ன?

சுற்றுலா தலமாக திகழ்ந்த செங்கல்பட்டு கொளவாய் ஏரி, தற்போது கழிவு நீர் சேமிப்பிடமாக மாறி வருகிறது. இந்த ஏரியை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தந்தி டிவி

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பெரிய ஏரிகளில் ஒன்று கொளவாய் ஏரி. முந்தைய காலத்தில் சுற்றுலாத்தலமாகவும் இருந்த இந்த ஏரியில் கட்டப்பட்டுள்ள மதகுகள் மூலம் சுமார் ஆயிரத்து 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.

* ஏரியை ஒட்டி அமைந்துள்ள செங்கல்பட்டு நகராட்சியில் பாதாள சாக்கடை வசதி இல்லாததால், நக​ரில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஏரியில் கலந்து தண்ணீரின் விஷத்தன்மை அதிகரித்து விவசாயம் மற்றும் வேறு எந்த தேவைக்கும் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

* இதனிடையே, 1998ம் ஆண்டு, ஏரியில் படகு குழாம் துவங்கப்பட்டது. ஆனால் படகு சவாரி துவங்கிய இரண்டு ஆண்டுகளில் கழிவுநீர் கலந்து ஏரி மாசுபட்டதால், படகில் பயணம் செய்தவர்களுக்கு தண்ணீரில் இருந்த சில விஷ பூச்சிகள் கடித்து தோல் வியாதிகள் ஏற்பட்டன. இதனால் அந்த படகு குழாம் மூடப்பட்டது.

* இந்நிலையில் ''ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து 90 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாகவும், ஆனால் அந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தவில்லை என்றும் நகர வளர்ச்சி மன்ற அதிகாரி பஷீர் தெரிவித்துள்ளார்.

* மேலும் நகராட்சி நிர்வாகம், அரசு இணைந்து ஜப்பான் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை செயல்படுத்தி, ஏரியை தூர்வாரி தண்ணீரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி