தமிழ்நாடு

ரூ.27.6 கோடி கடன் மோசடி - வங்கி தலைமை மேலாளர், தரகர் மீது சி.பி.ஐ. வழக்கு

போலி ஆவணங்கள் உதவியுடன் நடைபெற்ற கடன் மோசடி வழக்கில், இந்தியன் வங்கி தலைமை மேலாளர், தரகர் உள்பட 59 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.

தந்தி டிவி
போரூர், வடபழனி ,அண்ணா நகர், சைதாபேட்டை இந்தியன் வங்கி கிளைகளில் போலியான ஆவணங்கள் மூலம் 27 புள்ளி 6 கோடி ரூபாய் கடன் மோசடி நடைபெற்றதாக சி.பி.ஐ.யிடம், அந்த வங்கியின் மண்டல அலுவலகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் சரவணன் என்ற தரகர் மூலமாக இந்த மோசடி நடைபெற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதில், போரூர் இந்தியன் வங்கியின் தலைமை மேலாளர் பாரி உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படும் நிலையில், தலைமை மேலாளர் பாரி ,தரகர் சரவணன் உட்பட 59 பேர் மீது சி.பி.ஐ. 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் சிபில் ஸ்கோர் எனப்படும் கடன் வழங்குவதற்கான மதிப்பீடு குறைவாக உள்ளவர்கள், குறைந்த மதிப்புள்ள சொத்துக்கு அதிக அளவு கடன் தேவைப்படுபவர்கள் ஆகியோரை குறிவைத்து போலி ஆவணங்கள் மூலம் தரகர் சரவணன் கோடிக்கணக்கில் கடன் வாங்கிக் கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மோசடியில் வேறு எந்தெந்த வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது என சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு