தமிழ்நாடு

Vinayagar Rally | மாறி மாறி முழக்கம்.. பல்லடம் பள்ளிவாசல் அருகே பெரும் பரபரப்பு

மாறி மாறி முழக்கம்.. பல்லடம் பள்ளிவாசல் அருகே பெரும் பரபரப்பு

thanthitv

``வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’’ ``அல்லாஹு அக்பர்’’ - மாறி மாறி முழக்கம்.. பல்லடம் பள்ளிவாசல் அருகே பெரும் பரபரப்பு

#vinayagarrally #palladamissue

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பள்ளிவாசல் அருகே இருதரப்பினர் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பல்லடம் அறிவொளி நகர் பகுதியில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. விநாயகர் சிலையுடன் ஊர்வலம் பல்லடம் பெரிய பள்ளிவாசல் அருகே சென்றபோது, "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என முழக்கமிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பள்ளிவாசல் பகுதியில் இருந்த சிலர் "அல்லாஹு அக்பர்"” என முழக்கமிட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், இருதரப்பினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் ஊர்வலம் நடைபெற்றது..

ADMK | CM Vijay | TVK | "அந்த கம்பெனி சென்னையிலேயே இருக்கு.." - ஒரே ஒரு கேள்வியை கேட்ட EPS

CM Vijay | ``ஆட்சி மாறியிருக்கு.. புதிய அரசோட முடிவும் மாறும்னு நம்புறோம்’’ - சுப்ரீம் கோர்ட் அதிரடி

Madurai AIIMS| அறிவித்தது மத்திய அரசு.. தமிழகமே காத்திருந்தது நடக்க போகுது

Navodaya Issue| ``எங்களுக்கு தேவையில்ல’’ - சுப்ரீம் கோர்ட்டில் போல்டாக அடித்த தமிழக அரசு

VS Babu | TVK | வி.எஸ்.பாபு உடல்நிலை..? வெளியான முக்கிய ரிப்போர்ட்