சென்னை சேப்பாக்கம் கலைவாணர் கல்லூரியில், கட்டுமான துறையில் சிறந்து விளங்குவோருக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் துணை தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான் 2 விண்கலம் விரைவில் விண்வெளிக்கு அனுப்பப்படும் என்றார்.