தமிழ்நாடு

ஆவின் நிறுவனங்களில் முறைகேடு : பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி குற்றச்சாட்டு

ஆவின் நிறுவனங்களில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதாக பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
ஆவின் நிறுவனங்களில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதாக பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பெரம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை தன்னிச்சையாக உயர்த்தியுள்ளதாக கூறினார். இந்த விலை உயர்வு பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் என்றார். பால் விலை உயர்வை தடுக்க தமிழக அரசிடம் பல முறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறிய அவர், ஆவின் நிறுவனத்தில் பல முறைகேடுகள் நடந்து வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்தார்.

IUML | DMK Alliance | ``விலகல்’’ - திமுக கூட்டணிக்குள் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு

DMK | IUML | வெளியேறியது.. பெரும் விரிசல்.. திமுகவுக்கு பேரதிர்ச்சி

Minister Adhav |"அதிமுக தொண்டர்களை மகிழ்ச்சியோடு பார்த்து கொள்வார்.." - அடித்து சொன்ன அமைச்சர் ஆதவ்

TVK | CM Vijay | கட்சியை தவெகவில் இணைத்தார் கம்பம் MLA ஜெகநாத் மிஸ்ரா..

🔴LIVE : திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது IUML