விளையாட்டு போட்டிகளில், இந்தியா பதக்கங்கள் வெல்ல, தமிழகம் முக்கிய பங்கு வகிப்பதாக, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் நலன் மேம்பாட்டு நிறுவனத்தில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய அவர், இதனை தெரிவித்தார். மேலும், மத்திய அரசு திறமையான விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து, தமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்து வருவதாகவும், அவர் கூறினார்.