சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று சென்னை காவல்துறை கட்டுப்பட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் நடத்திய சோதனையில் அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லை என உறுதியானது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை, தேனாம்பேட்டையை சேர்ந்த சரவணன் என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்று தெரியவந்தது. இதனையடுத்து சரவணன் கைது செய்யப்பட்டார். தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அதிகளவில் மது அருந்திவிட்டு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சரவணன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.