தமிழ்நாடு

மேகதாது விவகாரம்: தமிழக அரசு மனுவை தள்ளுபடி செய்ய மத்திய அரசு கோரிக்கை

மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய கோரி, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

தந்தி டிவி

* மேகதாது அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மட்டுமே கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த விவகாரத்தில் தொடர்புடைய மாநிலங்களுடன் சுமூக தீர்வு எட்டப்பட்ட பிறகே இந்த திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் மனுவில் கூறியுள்ள மத்திய அரசு, எந்த ஆதாரமும் இல்லாமல் மத்திய அரசுக்கு எதிராக தவறான குற்றச்சாட்டுகளை தமிழக அரசு

முன் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

* காவிரி டெல்டா விவசாயிகளுக்கு பாதிப்பு வரும் வகையில் எந்த

திட்டமும் கொண்டு வரப்பட மாட்டாது என மத்திய அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* எனவே, மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

* எனினும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழு நேர உறுப்பினரை நியமிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் மனுவிற்கு, மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு