இதனிடையே நாட்டிலேயே சிறந்த கிராமமாக மத்திய அரசு தேர்வு செய்யும் அளவுக்கு எங்கள் கிராமத்தில் எந்த வசதியும் இல்லை என மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆட்சியர் கந்தசாமி மொழுகம்பூண்டி கிராமத்தை நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது கிராம மக்கள் ஆட்சியர் கந்தசாமியிடம் எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதி எதுவும் இல்லை என்று காலில் விழுந்து மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து அனைத்து வசதிகளும் செய்து தருவதாக ஆட்சியர் கந்தசாமி கிராம மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.