செய்துங்க நல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங் குறிச்சி காமராஜ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.அதில் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தவும், ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை வெளியிடவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்து பழங்கால பொருட்களை காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் 25 இடங்களில் அகழாய்வு நடத்தியது குறித்த ஆய்வு முடிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், அங்கு கண்டெடுக்கப்பட்ட அகழாய்வு பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்பவும் மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டனர்.