தமிழ்நாடு

நீட் தேர்வு மைய பெயர் குழப்பம் - தேர்வு எழுத முடியாமல்போன சோக சம்பவம்

நீட் தேர்வு மைய பெயர் குழப்பத்தால் காலதாமதமாக தேர்வு மையத்திற்கு வந்த ஐந்துக்கும் மேற்பட்ட மாணவிகள் தேர்வு எழுத முடியாமல்போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

தந்தி டிவி

நீட் தேர்வு மைய பெயர் குழப்பத்தால் காலதாமதமாக தேர்வு மையத்திற்கு வந்த ஐந்துக்கும் மேற்பட்ட மாணவிகள் தேர்வு எழுத முடியாமல்போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தாமரை இன்டர்நேஷனல் பள்ளி என்ற பெயரில் கும்பகோணத்திலும் தஞ்சாவூரிலும் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த இரு கல்வி நிறுவனத்திலும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. ஒரே பெயரில் இரண்டு தேர்வு மையங்கள் இருப்பதனால் தஞ்சை தேர்வு மையத்திற்கு செல்லவேண்டிய மாணவிகள் கும்பகோணத்திற்கும் கும்பகோணம் தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டிய மாணவ மாணவியர்கள் தஞ்சாவூருக்கும் சென்றனர். இதையடுத்து உரிய தேர்வு மையத்திற்கு மாணவ-மாணவிகள் திருப்பி அனுப்பபட்டனர். இதனால் சரியான நேரத்திற்கு வரமுடியாத மாணவிகள் தேர்வு எழுத பதற்றத்துடன் வந்த போது தேர்வு தொடங்கி விட்டதாக அறிவித்ததால் சில மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் இது போல் பெயர் குழப்பம் ஏற்படாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்