சென்னை , மதுரவாயல் நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஜெயபாண்டியன். கடந்த ஞாயிற்றுக்கிழமை வளசரவாக்கம், மெஜஸ்டிக் காலனியில் நண்பர் வீட்டின் முன்பு நின்றிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் முகவரி கேட்பது போல் ஜெயபாண்டியனின் செல்போனை பறித்துச் சென்றனர்.
மொபைலை மீட்க, இருசக்கர வாகனத்தின் பின்பக்க கம்பியை பிடித்து போராடிய அவர் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். இதில், சிவா என்பவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை தியாகராய நகர் துணை ஆணையர் அரவிந்தன், முதியவர் ஜெயபாண்டியனின் வீட்டிற்கே நேரில் சென்று ஒப்படைத்தார்.