ரீல்ஸ் உலகே கொண்டாடி தீர்த்த `ரோபோ சங்கர்’ வீட்டுக்கு இன்று சோகமாக படை எடுக்கும் பிரபலங்கள் #roboshankardeathanniversary #yogibabu #roboshankar மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்பட்டது. சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கி, பின்னர் வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் ரோபோ சங்கர். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் உயிரிழந்தார். இந்நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ரோபோ சங்கரின் இல்லத்திற்கு நடிகர் யோகி பாபு நேரில் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த ரோபோ சங்கரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய யோகி பாபு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். ரோபோ சங்கரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு, அவரது குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.