தமிழ்நாடு

ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணை அடித்து சீண்டிய மூவர் - கொடூரத்தின் உச்சிக்கு சென்ற காம கொடூரர்கள்.. கொதித்த பொது மக்கள்.. கோவையில் பயங்கரம்

தந்தி டிவி

கோவை மாவட்டம், சூலூர் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்...

எம்.ஜி.ஆர் நகர் அருகே சட்ட விரோதமாக கள் இறக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், அங்கு கள் குடிக்க வரும் நபர்களால் பிரச்சனை ஏற்படுவதாகவும் அப்பகுதியினர் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் கள் குடிக்க வந்த செல்லதுரை என்ற நபர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கடுமையாக தாக்கியுள்ளார். அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், செல்லதுரையை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, செல்லதுரை தன்னுடன் மேலும் இருவர் வந்ததாகவும் அவர்கள் இருவரும் தப்பிச் சென்றதாகவும் கூறிய நிலையில், தப்பியோடிய இருவரை கைது செய்ய வேண்டுமெனவும், அப்பகுதியில் உள்ள கள்ளுக்கடையை அகற்ற வேண்டுமெனவும் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்