காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல்சக்தி அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்ததற்கு தமிழக டெல்டா பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் ஊரடங்கு தடை உத்தரவை மீறி இன்று
நாகையை அடுத்துள்ள பாலையூர் கிராமத்தில் பருத்தி நடவு செய்யப்பட்ட வயலில் கறுப்பு கொடி நட்டு ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்கள்
எழுப்பினர்.