புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த ஏப்ரல் மாதம் அடகு வைக்கப்பட்ட 13 புள்ளி 75 கிலோ தங்க நகைகள் மாயமானது. இதனையடுத்து 4 வங்கி ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் அவர்களுக்கு துப்பு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்றைய தங்கத்தின் விலை என்னவோ அதனை கணக்கிட்டு ஒவ்வொருவருக்கும் பணம் வழங்கப்படும் என்று வங்கி அறிவித்திருந்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தும் பணியை வங்கி நிர்வாகம் இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த பணி 3 நாட்களுக்குள் முடிவடையும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.