தமிழ்நாடு

தேனி : மறியலின் போது இளைஞர்கள் தாக்கப்பட்டதாக புகார் - 100 பேர் மீது வழக்கு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மறியல் போராட்டத்தின்போது இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்கியதாக சுமார் 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மறியல் போராட்டத்தின்போது இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்கியதாக சுமார் 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியகுளம் இந்திராபுரி தெருவை சேர்ந்த சுரேந்தர் தனது நண்பருடன் நேற்று முன்தினம் தேனியில் இருந்து பெரியகுளத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது லட்சுமிபுரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்கள் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்களின் உறவினர்கள் பெரியகுளத்தில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் இளைஞர்களை தாக்கியதாக நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்