கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி இந்து முன்னணியினர் மனு கொடுத்தனர். அதில், தேர்தல் பரப்புரையில், கமல்ஹாசன் ஒட்டுமொத்த இந்துக்களின் மனதையும் புண்படுத்தும் வகையில் பேசியதாக தெரிவித்துள்ளனர். இதனால், கமல் மீது உரிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் வலியுறுத்தினர்.