இஸ்ரோ மூத்த விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது பொய் குற்றம் சுமத்திய வழக்கில், காவல்துறை அதிகாரிகள் முன் ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சிபிஐ வழக்கு பதிவு செய்த காவல்துறை அதிகாரிகளான விஜயன் மற்றும் தம்பி துர்காதத் ஆகியோர் முன் ஜாமின் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், காவல்துறை அதிகாரிகளாக தங்களது பணியை மட்டுமே செய்ததாகவும், தங்கள் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது சந்தேகத்தை எழுப்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.