தமிழ்நாடு

மன்சூர் அலிகான் மகன் மீது பாய்ந்த வழக்கு... கிளம்பிய புது பஞ்சாயத்து...

தந்தி டிவி

மன்சூர் அலிகான் மகன் மீது பாய்ந்த வழக்கு... கிளம்பிய புது பஞ்சாயத்து... 67 வயது முதியவர் பரபரப்பு புகார்.

சென்னையில் 35 லட்சத்தை திருப்பி தராத விவகாரத்தில் ஆட்களுடன் வந்து மிரட்டியதாக 67 வயது முதியவர் கொடுத்த புகாரில், மன்சூர் அலிகான் மகன் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மன்சூர் அலிகான், ஃபிளாட் வாங்குவதற்காக கொடுத்த 35 லட்சத்தை, திருப்பி தராமலும், ஃபிளாட்டை வாங்கி தராமலும் வரிசை கனி என்ற முதியவர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் மன்சூர் அலிகான் மகன் துக்ளக்குக்கும், வரிசை கனிக்கும் தகராறு ஏற்பட்டது. வரிசை கனி அளித்த புகாரின் பேரில் துக்ளக் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வரிசை கனியிடம் போலீசார் விசாரித்து கொண்டிருந்த போது, மன்சூர் அலிகான் குறுக்கிட்டு திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது போலீசார் சினிமாவில் வசனம் பேசுவது போல் பேச கூடாது என கூறியும், நீதிமன்றத்தின் மூலம் பணத்தை பெற்று கொள்ளுமாறு சொல்லியும் அனுப்பி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்