மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன், நடிகர் தனுஷ் தமது மகன் என்று உரிமை கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கின் போது உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் சார்பில் போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கதிரேசன் சார்பில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், வழக்கை அடுத்த மாதம் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.