தமிழ்நாடு

விபத்தில் 2 கால்களும் செயலிழந்த தச்சு தொழிலாளி..- கோரிக்கை வைத்த மாற்றுத் திறனாளி

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள மாராடி என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த தச்சு தொழிலாளி ராஜன், சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கியுள்ளார். அப்போது, அவரது இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில், வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளார். பின்னர், வருமானத்திற்காக, தேங்காய் சிரட்டைகளை சேகரித்து, அதனைக் கொண்டு கரண்டி, தேநீர் கோப்பைகள் உள்ளிட்டவற்றை செய்து விற்பனை செய்து சொற்ப வருமானம் ஈட்டி வருகிறார். திருமணமாகாத ராஜன், தனது சகோதரியுடன் வசித்து வருகிறார். தனக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் மற்றும் அதற்கான சலுகைகள் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"