தமிழ்நாடு

கர்நாடக இசையில் கிறிஸ்தவ பாடல்கள் - ஓ.எஸ்.அருண் கச்சேரி ரத்து

இந்த நிகழ்ச்சியை இந்து அமைப்புகளும், கர்நாடக இசை ரசிகர்களின் ஒரு பிரிவினரும் கடுமையாக எதிர்த்திருந்தனர்

தந்தி டிவி

பிரபல பாடகர் ஓ.எஸ்.அருணின் ‘இயேசுவின் சங்கம சங்கீதம்’ என்ற இசை நிகழ்ச்சி, வரும் 25ம் தேதி சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில், இயேசுநாதரை புகழ்ந்து பாடும் கீர்த்தனைகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை சில இந்து அமைப்புகளும், கர்நாடக இசை ரசிகர்களின் ஒரு பிரிவினரும் சமூக வலைதளங்களில் கடுமையாக எதிர்த்தனர். மத ரீதியான விமர்சனங்கள் ஒரு புறமிருக்க, தியாகராஜரின் ராமர் கீர்த்தனைகளில் வார்த்தைகள் மட்டும் மாற்றப்பட்டு, கிறிஸ்தவ பாடலாக்கப் படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கு முன் தேவாலயத்தில் கச்சேரி நடத்திய டி.எம்.கிருஷ்ணா, கிறிஸ்தவ பாடல் பாடிய நித்யஸ்ரீ மகாதேவன், கிறிஸ்தவ பாடல் தொகுப்பை வெளியிட்ட அருணா சாய்ராம் ஆகியோருக்கும் எதிர்ப்பு கிளம்பியது. மதமாற்றம் செய்யும் அமைப்புகளுக்கு இவர்கள் துணை போவதாகவும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டனர்.

இடைவிடாமல் தொடர்ந்த இத்தகைய சர்ச்சைக்கு இடையில், “சொந்த காரணங்களுக்காக“ ஆகஸ்ட் 25 நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக ஓ.எஸ்.அருண் அறிவித்துள்ளார்.

அருணா சாய்ராம் விளக்கம்

விமர்சனங்களுக்கு பதிலளித்த அருணா சாய்ராம், பாரம்பரிய கர்நாடக இசையில், தான் மாற்றம் செய்ததில்லை என்று குறிப்பிட்டுள்ளார். கர்நாடக பாடல்களை கிறிஸ்தவத்திற்காக மாற்றியதாக வரும் தகவல் வதந்தி என்றும் கூறியுள்ளார்.

டி.எம்.கிருஷ்ணா சவால்

இசை நிகழ்ச்சிக்கு எழுந்த எதிர்ப்பை கண்டித்த பாடகர் டி.எம். கிருஷ்ணா, இனி ஒவ்வொரு மாதமும் இயேசு அல்லது அல்லாஹ்-வை புகழும் ஒரு பாடலை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ