தமிழ்நாடு

படகு மீது சரக்கு கப்பல் மோதி விபத்து "உடல்களை அடையாளம் காணுவதில் சிக்கல்"

படகு மீது சரக்கு கப்பல் மோதி விபத்து "உடல்களை அடையாளம் காணுவதில் சிக்கல்"

தந்தி டிவி

படகு மீது சரக்கு கப்பல் மோதி விபத்து "உடல்களை அடையாளம் காணுவதில் சிக்கல்"

படகு மீது சிங்கப்பூர் சரக்கு கப்பல் மோதிய விபத்தில் உயிரிழந்த மீனவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடற்கரை கிராமத்தை சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் என்பவருடன் சேர்ந்து தமிழகத்தை சேர்ந்த ஏழு மீனவர்களும் மேற்கு வங்கத்தை சேர்ந்த 7 மீனவர்களும் மக்களூர் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது சிங்கப்பூரை சேர்ந்த சரக்குக் கப்பல் மோதியதில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது., இதில் ராமநாதபுரத்தை சேர்ந்த வேல்முருகன் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த சுனில் தாஸ் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்,. மூன்று மீனவர்களது உடல்கள் மீட்கப்பட்டன,. கடலில் மாயமான 9 மீனவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேலும் 3 மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன,. கடலில் உடல் கிடந்ததால் உடலை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக கடலோர காவல் படையிரிடம் இருந்து மீனவ அமைப்புகளுக்கு தகவல் வந்துள்ளது,.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்