ஈரோடு அருகே சென்னிமலை சாலையில் கார் வளைவில் திரும்பிய போது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் காரின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இரு பெண்களையும் கார் ஓட்டுநர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இருசக்கர வாகனம் காரின் மீது மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிள்ளது. இந்த விபத்து தொடர்பாக சூரம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.