தமிழ்நாடு

புயலென பறந்த கார் - வசமாக சிக்கிய பதிவுத்துறை அதிகாரி - நடுரோட்டில் நடந்த அதிரடி சம்பவம்

தந்தி டிவி

விருதுநகர் பத்திரப்பதிவு இணை பதிவாளர் சென்ற காரில் இருந்து உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது...

விருதுநகர் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் சுந்தரேஸ்வரன் என்பவர் இணை பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், அதே அலுவலகத்தில் தொகுப்பு ஊதியத்தில் உதவியாளராக பணிபுரியும் முத்துக்காசி என்பவருடன் வாடகை காரில் மதுரைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இவர்கள் சென்ற காரில் உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து செல்லப்படுவதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில், சத்திரரெட்டியாபட்டி சோதனைச் சாவடியில் அவர்கள் காரை மறித்து சோதனை செய்தனர். இதில், ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்