தமிழ்நாடு

சொகுசு காரில் பயணம் செய்த நாக பாம்பு : வேகமாக பரவி வரும் வீடியோ

சொகுசு காரில் பயணம் செய்த பாம்பு வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

தந்தி டிவி

திருப்பூரில் இருந்து முத்தூருக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக காரில் 2 பேர் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற கார், காங்கேயத்தை கடக்கும் போது சாலையை கடக்க முயன்ற பாம்பு, காரின் அடிப்பகுதியில் தொற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கார், முத்தூர், வரட்டுக்கரை அருகே வந்த போது பாம்பு ஒன்று காரின் முன்னால் படம் எடுத்துள்ளது. இதனையடுத்து தென்னங்கரைப் பாளையம் பிரிவில் காரை நிறுத்தி, விஷயம் கேள்விப்பட்டு மக்கள் அங்கே கூடத் துவங்கியிருக்கிறார்கள். ஆனால் பாம்பு காரில் இல்லை. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் காரில் பாம்பைத் தேட அது சிக்கவில்லை.

இதனையடுத்து காருக்குள் பாம்பு வர வாய்ப்புள்ளதா என, காரில் பயணம் செய்தவர்கள் கார் நிறுவனத்திற்கு தொலைபேசியில் கேட்டுள்ளனர். எறும்பு கூட காருக்குள் புக முடியாது என்றவர்கள், காரை நேரில் எடுத்து வரச் சொல்லியிருக்கிறார்கள். மறுநாள் காலையில் காரை கோயமுத்தூருக்கு கொண்டு சென்று சோதனை செய்த போது, ஓட்டுநர் இருக்கைக்கு பக்கத்தில் இருந்த இருக்கையின் கீழே உள்ள கால் மிதியடிக்கு கீழ் நாகபாம்பு ஒன்று சுருண்டு கிடந்துள்ளது. இதனையடுத்து பாம்பாட்டி வரவழைக்கப்பட்டு பாம்பைப் பிடித்திருக்கிறார்கள். பாம்பை காருக்குள் இருந்து பிடிக்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்