ராஜேஷ் என்ற அந்த ஓட்டுனர் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியரை ஏற்றி சென்ற போது மற்றொருவரை அழைத்து செல்வதற்காக பாடி அருகே காரை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த காவலர்கள் ராஜேஷை தரக்குறைவாக திட்டி காரை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜேஷ் அண்மையில் மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து செல்போனில் ராஜேஷ் உருக்கமாக பேசிய வீடியோவை அவரது உறவினர்கள் வெளியிட்டுள்ளனர்.