தமிழ்நாடு

பேருந்தை வழிமறித்து ஓட்டுநரின் காலை கடித்த கார் டிரைவர்

தந்தி டிவி

காருக்கு வழிவிடாத ஆத்திரத்தில், பேருந்து ஓட்டுநரை கடித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

மதுரையிலிருந்து, முதுகுளத்தூருக்கு சென்ற அரசு பேருந்தின் பின்னார், கார் ஒன்று தொடர்ந்து ஹாரன் அடித்தபடியே சென்றுள்ளது. பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் பேருந்தை வழிமறித்து, காரை நிறுத்திய இளைஞர், இறங்கிச் சென்று பேருந்து ஓட்டுநர் சந்திரசேகரை, இரும்பு கம்பியால் தாக்கியதாக தெரிகிறது. மேலும், அவரது காலையும் அந்த இளைஞர் கடித்து வைத்துள்ளார். தகவலறிந்து சென்ற போலீசார், இளைஞரை பிடித்து விசாரித்த போது, அவர் சிவகங்கை மாவட்டம் தே. புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜோதிமணி என்பதும், தமது காருக்கு வழிவிடாத ஆத்திரத்தில் அவர் பேருந்து ஓட்டுநரை தாக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து, ஜோதிமணியை போலீசார் கைது செய்தனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்