Krishnagiri | கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து..ஒருவர் பரிதாபமாக பலி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே, கார் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கரூரில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், படுகாயமடைந்த விஜி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து காரணமாக சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.
#krishnagiri #caraccident #thanthitv