தமிழ்நாடு

சாலையில் சென்ற கார் தீப்பிடித்து விபத்து : ஓட்டுனர் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார்

கோவையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

கோவையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமகிருஷ்ணன் என்பவர் ஆம்னி கார் ஒட்டி வந்துள்ளார்.கார் டெக்ஸ்டூல் மேம்பாலத்தில் வந்து கொண்டு இருந்த போது காரின் பின்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீயில் சிக்கி கார் முழுவதும் எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.தீ விபத்து ஏற்பட்டவுடன் கார் ஓட்டுனர் ராமகிருஷ்ணன் காரில் இருந்து் இறங்கிவிட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. கார் சிலிண்டர் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்