தமிழ்நாடு

சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் : காரில் இருந்து வெளியேறி உயிர் தப்பிய பயணிகள்

சென்னை மீனம்பாக்கத்தில் மேம்பாலத்தில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தந்தி டிவி

சென்னை மீனம்பாக்கத்தில் மேம்பாலத்தில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலத்தை சேர்ந்த கமலேஷ், தமது தாய் மற்றும் சகோதரருடன் சென்னைக்கு காரில் வந்துள்ளார். மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரேயுள்ள மேம்பாலத்தில் வந்தபோது மின்கசிவு காரணமாக காரில் இருந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து, உடனடியாக காரில் இருந்து அனைவரும் கீழே இறங்கினர். பின்னர் தீயானது மளமளவென பற்றி எரிய தொடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீவிபத்து காரணமாக பல்லாவரம் - கிண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு