தமிழ்நாடு

30 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலை- கேப்ஜெமினி அறிவிப்பு

பிரான்ஸை தலைமையிடமாகக் கொண்ட தகவல் தொழில் நுட்ப நிறுவனமான கேப்ஜெமினி நடப்பாண்டில் 30 ஆயிரம் இந்தியர்களை பணியமர்த்த உள்ளது.

தந்தி டிவி
பிரான்ஸை தலைமையிடமாகக் கொண்ட, தகவல் தொழில் நுட்ப நிறுவனமான கேப்ஜெமினி, நடப்பாண்டில் 30 ஆயிரம் இந்தியர்களை பணியமர்த்த உள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் அஸ்வின் யார்தி கூறுகையில், புதியவர்கள், மற்றும் பணி அனுபவம் கொண்டவர்கள் என இரு வகைகளிலும் பணியமர்த்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நிறுவனத்தில் உள்ள 2 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்களில், சுமார் ஒன்றரை லட்சம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 30 ஆயிரம் இந்தியர்களை பணிக்கு அமர்த்த உள்ளது. கேப்ஜெமினி நிறுவனம் 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

DMK | IUML | Election 2026 | முடிந்தது கூட்டணி பேச்சுவார்த்தை - எத்தனை தொகுதியை ஒதுக்கியது திமுக?

DMK Anna Arivalayam | அண்ணா அறிவாலயத்தில் மயங்கி விழுந்த காதர் மொகிதீன்

DMK Alliance | CPI | ``கூட்டணி கட்சிகள் தொகுதிகளை குறைக்க முன்வர வேண்டும்’’

DMK | IUML | அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை.. தொகுதி மாற்ற திட்டமா? - உடைக்கும் சுமந்த் சி.ராமன்

DMK Alliance | எத்தனை தொகுதிகள்? - பேச்சுவார்த்தையில் பரபரக்கும் அறிவாலயம்