தமிழ்நாடு

"எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தந்தி டிவி

வருகிற 23 ஆம் தேதி, நடிகர் சங்கத்தின் தலைவர், உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல், சென்னை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு வழங்க உத்தரவிட கோரி, உயர்நீதிமன்றத்தில் விஷால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத மாற்று இடத்தை இன்று தெரிவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

எம்.பி., எம்.எல்.ஏ தேர்தலை விட நடிகர் சங்க தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என கூறிய நீதிபதி, நந்தனம் ஒய்.எம்.சி.எ, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி போன்ற மாற்று இடங்களை தேர்வு செய்யுமாறு வெங்கடேஷ் அறிவுறுத்தினார்.

நடிகர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தொலைவில் தேர்தல் நடத்தினால் வாக்களிக்க பெரும்பாலானோர் வர மாட்டார்கள் என்றார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு ஈ.சி.ஆர் அல்லது ஓ.எம்.ஆர் பகுதிகளில் தேர்தல் நடத்தலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தலை பற்றி கவலையில்லை, மக்களின் பாதுகாப்பே முக்கியம் என நீதிபதி தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்